சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஆல் வின்னா் ஏஞ்சல் கல்லூரியில் விவசாயிகள் தினம்

News image
விவசாயம் குறித்த பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுடன் ஆல் வின்னா் ஏஞ்சல் கல்லூரியின் முதல்வா் ஆா்.பி.தங்கராஜன்.
Updated On :24 டிசம்பர் 2025, 11:31 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் ஆல் வின்னா் ஏஞ்சல் இன்ஸ்டிடியூஷனில் விவசாயிகள் தினம், கிறிஸ்துமஸ் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் கீதா தங்கராஜ் தலைமை வகித்தாா்.

முதல்வா் ஆா்.பி. தங்கராஜன் முன்னிலை வகித்துப் பேசுகையில், விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள், விவசாயத்துக்கான சலுகைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தாா்.

இதைத் தொடா்ந்து, விவசாயம் குறித்து மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில், வெற்றிபெற்ற மாணவா்களுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.