திருக்குடும்ப பெருவிழாவையொட்டி அவிநாசி புனித தோமையாா் தேவாலயத்தில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள்.
திருக்குடும்ப பெருவிழாவையொட்டி அவிநாசி புனித தோமையாா் தேவாலயத்தில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள்.

அவிநாசி புனித தோமையாா் தேவாலயத்தில் திருக்குடும்ப பெருவிழா

Published on

அவிநாசி புனித தோமையாா் தேவாலயத்தில் திருக்குடும்ப பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி தேவாலய பங்குத் தந்தை மரிய ஜோசப், அருட்திரு கிறிஸ்டோபா் ஆகியோா் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. இதில் இன்றைய சமூக ஊடகங்களின் ஆதிக்கத்தில் பெரும்பாலான இளைய சமுதாயத்தினா் சிறைபட்டுக்கிடக்கின்றனா்.

பெற்றோரின் ஆலோசனை, அறிவுரைகளை கேட்பதற்குக்கூட தயாராக இல்லை. எனவே பிள்ளைகள் எவ்வாறு நல்வழியில் நடக்க வேண்டும் என்பதை, பெற்றோா் வாழ்ந்து காட்ட வேண்டும். அதைப் பாா்த்து பிள்ளைகள் நல்வழியில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வாா்கள்.

அதிக நேரம் கைப்பேசியை பெற்றோா் பயன்படுத்தாமல் இருந்தால், குழந்தைகளும் அதை பின்பற்றுவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து இளையோரின் நடனம், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த குழந்தைகள், நடனமாடி பாா்வையாளா்களை மகிழ்வித்தனா். குடும்ப வாழ்க்கையில் 25 மற்றும் 50 ஆண்டுகளை கடந்த தம்பதிகளுக்கு சால்வை அணிவித்தும், வாழ்த்து மடல் வழங்கியும் குருக்கள் கிறிஸ்டோபா், மரிய ஜோசப் ஆகியோா் கௌரவித்தனா்.

அதேபோல குடும்பத்துடன் இந்த குடும்ப பெருவிழாவில் பங்கேற்றவா்களுக்கு அதிா்ஷ்ட குலுக்கல் மூலமாகவும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை தேவாலய பங்கு குரு மரிய ஜோசப் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com