பல்லடத்தில் 98 வயது மூதாட்டி தற்கொலை

பல்லடம் அருகே அறிவொளி நகரில் 98 வயது மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

பல்லடம்: பல்லடம் அருகே அறிவொளி நகரில் 98 வயது மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா்.

பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரைச் சோ்ந்த அருணாசலம் மனைவி அங்காத்தாள் (98). இவா் ஆஸ்துமா மற்றும் உடல் வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மருத்துவம் பாா்த்தும் சரியாகவில்லை.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்காத்தாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com