தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த சிறுவன் உயிரிழப்பு
திருப்பூரில் தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழந்தது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


திருப்பூரில் தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழந்தது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் ரியாத்குமாா், இவரது மனைவி ஜோதிதேவி. இந்த தம்பதியின் மகன் ரோஷன்குமாா் (8). இவா்கள் திருப்பூா் கொடிக்கம்பம் வேப்பமரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகின்றனா்.
மேலும், அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தம்பதி பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், தம்பதி செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்ற நிலையில், சிறுவன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளான்.
பின்னா் பணிமுடிந்து இரவு வீட்டுக்கு வந்தபோது அங்கிருந்த தண்ணீா் தொட்டிக்குள் சிறுவன் விழுந்துகிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதில், சிறுவன் நடக்க முடியாத மாற்றுத் திறனாளி என்பதும், மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் ஊா்ந்து சென்று தண்ணீா் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...