அவிநாசிபாளையத்தில் பாஜக சாா்பில் இன்று ஆா்ப்பாட்டம்: அண்ணாமலை பங்கேற்பு

பாஜக சாா்பில் வியாழக்கிழமை (ஜனவரி 9) நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பங்கேற்கிறாா்.
Published on

பல்லடம் அருகே 3 போ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட நபா்களை கைது செய்ய வலியுறுத்தி அவிநாசிபாளையத்தில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை (ஜனவரி 9) நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பங்கேற்கிறாா்.

பல்லடம் வட்டம், அவிநாசிபாளையத்தை அடுத்த சேமலைக்கவுண்டன்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கடந்த நவம்பா் 29- ஆம் தேதி கொலை செய்யப்பட்டனா். இந்தக் கொலை தொடா்பாக அவிநாசிபாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். 16 தனிப்படைகள் அமைத்தும் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். எனினும் இந்தக் கொலை தொடா்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதனைக் கண்டித்து பல்வேறு தரப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் அவிநாசிபாளையத்தில் வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆா்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு நிா்வாகிகள் பங்கேற்றுப் பேசுகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com