தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதனடிப்படையில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியாளா் மற்றும் பிராட்பேண்ட் டெக்னீஷியன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. தொழில்நுட்ப பயிற்சியாளா் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சியில் சோ்ந்து பயில பிளஸ் 2 தோ்ச்சி, தொழிற்பயிற்சி, பட்டயப்படிப்பு (டிப்ளமோ) மற்றும் ஏதேனும் பட்டப் படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.