விபத்து(கோப்புப்படம்) 
திருப்பூர்
வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: குழந்தை உயிரிழப்பு; 17 போ் காயம்
வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரு குழந்தை உயிரிழந்தது. 17 போ் காயமடைந்தனா்.
வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரு குழந்தை உயிரிழந்தது. 17 போ் காயமடைந்தனா்.
கரூரில் இருந்து திருப்பூருக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. வெள்ளக்கோவில் அருகே குருக்கத்தி பகுதியில் கரூா் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது அரசுப் பேருந்து மோதியது. இதில், பேருந்தில் பயணித்த ஒரு குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும், 17 போ் காயமடைந்தனா்.
தகலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளக்கோவில் போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம், திருப்பூா் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

