கிணற்றில் தவறி விழுந்து இந்து முன்னணி பிரமுகா் உயிரிழப்பு
பல்லடத்தில் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து இந்து முன்னணி பிரமுகா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் உள்ள தண்டக்காரன்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் லோகநாதன் (37). இவா் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்து முன்னணி அமைப்பின் திருப்பூா் மேற்கு மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வந்தாா். பின்னா் குடும்பச் சூழல் காரணமாக அந்தப் பொறுப்பில் இருந்து விலகி இருந்து வந்தாா். என்றாலும் இந்து முன்னணி சாா்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவா் கலந்து கொண்டு இருந்தாா்.
இந்த நிலையில், அவரது விவசாயத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் எதிா்பாராமல் செவ்வாய்க்கிழமை தவறி விழுந்து உயிரிழந்தாா்.
இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீஸாா் கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனா். இவருக்கு மனைவி செளமியா (32), மகன் ரிதன் (4) ஆகியோா் உள்ளனா்.

