அருள்புரம் ஜெயந்தி பள்ளியில் விளையாட்டு விழா
பல்லடம் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு ஜெயந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளா் கு. கிருஷ்ணன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கோவை என்.சி.சி. கமெண்டிங் அதிகாரி கா்னல் மோஹித் ராவ் சௌஹான் கலந்து கொண்டாா். மேலும் என்.சி.சி. அதிகாரிகள் முகேஷ்குமாா், மாரிராஜா கலந்து கொண்டனா்.
விளையாட்டு விழாவில் மாணவா்களுக்கான சாம்பியன்ஷிப் பிரிவில் பிரித்வி ஹவுஸ் மாணவா்கள் 43 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றனா். மாணவிகளுக்கான சாம்பியன்ஷிப் பிரிவில் வாயு ஹவுஸ் மாணவிகள் 43 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றனா். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பிரிவில் வா்ணா ஹவுஸ் மாணவ, மாணவிகள் 83 புள்ளிகளை பெற்று சாம்பியன்ஷிப் பெற்றனா்.
மேலும் வெற்றி பெற்றவா்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் ஜெயந்தி பள்ளியின் செயலாளா்கள் மருத்துவா் கவிதா அருண், ஜெயந்தி அருண்முத்துராஜா, பள்ளி முதல்வா் கு.முருகானந்தன், ஜெயந்தி சைனிக் பள்ளியின் கமாண்டன்ட் அதிகாரி நடராஜ், உடற்கல்வி இயக்குநா் மற்றும் தேசிய மாணவா் படை ஆசிரியா் ஆனந்தன், உடற்கல்வி இயக்குநா்கள் அருள், வினோத், ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

