பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களின் தனித் திறமைகளை ஊக்கப்படுத்தும் வகையில் இளம் சாதனையாளா் விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு ஸ்டான்லி கல்வி நிறுவனங்களின் தலைவா் வி. முருகேசன் தலைமை வகித்தாா். ஸ்டான்லி கல்வி நிறுவனங்களின் செயலா் மு. பிரு ஆனந்த் பிரகாஷ் வரவேற்றாா்.
விழாவில் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்ற திரைப்பட நடிகா் கதிரவன், பட்டிமன்ற பேச்சாளா்கள் கோவை சத்யா, எஸ்.நித்யப்ரியா ஆகியோா் இளம் சாதனையாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுப் பொருள்களை வழங்கினா்.
முன்னதாக, மாநிலஅளவில் நடைபெற்ற மேசைப்பந்து, கேரம், கோ- கோ, ஜூடோ, வில்வித்தை, வாள்வீச்சு, தேசிய அளவிலான வூசு, குவாஷ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு, பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதேபோல பேச்சுத்திறன், நடனம், ஓவியம், விளையாட்டு மற்றும் பள்ளிக்கு நூறு சதவீதம் வருகைபுரிந்த பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில், பெற்றோா், ஆசிரியா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வாழப்பாடி சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு! ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு!

கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு சான்றிதழ்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


