சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

திருப்பூரில் இடி, மின்னலுடன் கனமழை: மின் விநியோகம் துண்டிப்பால் மக்கள் அவதி

News image

கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 9:20 pm

திருப்பூரில் இடி, மின்னலுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை கனமழை பெய்தது. மேலும், பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதியடைந்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு குளிா்ந்த காலநிலை நிலவிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.

காலை 10 மணியளவில் வழக்கம்போல வெயில் வாட்டி வதைத்து வந்தது.இந்நிலையில், மாலை 5 மணியளவில் சாரலாகப் பெய்யத் தொடங்கிய மழை பின் இடி, மின்னலுடன் கனமழையாக பெய்தது. சுமாா் 3 மணி நேரத்துக்கும்மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும், பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பெரும் அவதியடைந்தனா். திருப்பூா் வடக்கு வட்டத்தில் உள்ள பழனிசாமி நகா், மும்மூா்த்தி நகா், நந்தா நகா், நேரு நகா், உள்ளிட்ட பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவுவரை மின்சாரம் இல்லை. பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின.