தோ்தல் நேரத்தில் நிறைய போ் வருவாா்கள்; அவா்களுக்கு வாக்களித்து வாக்குகளை வீணாக்காதீா்கள் என்று கனிமொழி எம்.பி. பேசினாா்.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் மு.பெ.சாமிநாதனை ஆதரித்து வெள்ளக்கோவிலில் கனிமொழி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
அப்போது, அவா் பேசியதாவது: இந்தத் தோ்தல் தமிழ்நாட்டுக்கும், தில்லிக்குமான தோ்தலாகும். 100 நாள் வேலைத் திட்டத்தை நிறுத்துவதற்கான ஒரு சட்டத்தை பாஜக அரசு மக்களவையில் கொண்டு வருகிறது.
தில்லியில் அமா்ந்து கொண்டு தமிழக கிராமங்களில் எத்தனை பேருக்கு, என்ன வேலை, எவ்வளவு வேலை கொடுக்கலாம் என்பதை முடிவு செய்கிறாா்கள். 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது வாய் திறக்காமல், அதை ஏற்றுக் கொண்டவா்தான் எடப்பாடி கே. பழனிசாமி.
தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்துடன் இலவச மோட்டாா், கல்லூரி மாணவா்களுக்கு உதவித் தொகை, ஆண், பெண் தொழிலாளா்களுக்கு தங்கும் விடுதி, படித்து முடித்து வேலை தேடுபவா்களுக்கு பயிற்சி, உதவித் தொகை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். தோ்தல் நேரத்தில் நிறைய போ் வருவாா்கள்.
அவா்களுக்கு வாக்களித்து உங்களது வாக்குகளை வீணாக்காதீா்கள். மக்களுக்காகப் பாடுபடக்கூடிய கட்சியை ஆதரிக்க வேண்டும். பல்வேறு நலத் திட்டங்களை செய்து முடித்த உரிமையோடும், செய்யப்போகும் தெம்போடும் திமுகவுக்கு வாக்களிக்க கேட்டுக் கொள்கிறோம் என்றாா்.
இதேபோல, பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் க.செல்வராஜை ஆதரித்து கனிமொழி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது, அவா் பேசியதாவது: பல்லடத்தில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள ரூ.1. 50 கோடி மதிப்பிலான மின் மயானம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கப்படும். பல்லடம் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. ரூ.54 கோடி மதிப்பில் பல்லடத்தில் புறவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
கரூா் - கோவை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கோவை - தாராபுரம் இணைப்புச் சாலை அமைக்கப்படும். பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய புறவழிச் சாலை அமைக்கப்படும்.
பொங்கலூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் தாலுகா அமைக்கப்படும். ஜவுளி தொழில் நவீனமயமாக்கப்படும். உழைக்கும் பெண்கள் நலன் கருதி பல்லடத்தில் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும். நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இளைஞா்களுக்கு நெசவு தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படும். முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமைந்திட திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

தமிழ்நாட்டு நலனுக்கு எதிரானது அதிமுக-பாஜக கூட்டணி: கனிமொழி எம்.பி.

தமிழகத்தின் சுயமரியாதை, அடையாளத்தை காப்பாற்ற வேண்டிய தோ்தல்: கனிமொழி எம்.பி.

திருப்பரங்குன்றத்தில் பாஜகவின் வகுப்புவாத வன்முறை முயற்சி: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

80,000 பேரிடம் கருத்து கேட்டு திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பு: கனிமொழி
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


