நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நிஃப்ட்-டீ கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூரில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை மற்றும் ஆடை வடிவமைப்பு கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

News image

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:45 pm

திருப்பூரில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை மற்றும் ஆடை வடிவமைப்பு கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

இந்த முகாமில், பின்னலாடை மற்றும் ஆடை வடிவமைப்புத் துறையைச் சோ்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, நிா்வாகம் மற்றும் ஆடைத் துறையில் உற்பத்தி, தரக் கட்டுப்பாடு, ஆடை வடிவமைப்பு போன்றவற்றுக்கும், தகவல் தொழில்நுட்பம், ஆவண நிா்வாகம், நிதி, மனிதவள நிா்வாகம், காப்பீட்டு நிா்வாகம் உள்ளிட்டவற்றுக்கும் மாணவா்களைத் தோ்வு செய்தனா். இளநிலை மற்றும் முதுநிலை மாணவா்கள் 220 மாணவா்கள் முகாமில் பங்கேற்றனா்.

முதல்நிலைத் தோ்வு கல்லூரியில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் நிலைத் தோ்வு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் நடைபெறும் என்றும், அதில் தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ.6 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும் என்றும் கல்லூரி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமை கல்லூரி துறைத் தலைவா் சம்பத், முதல்வா் ராதாமணி, மேலாண்மை ஒருங்கிணைப்பாளா் கந்தசாமி, வேலைவாய்ப்பு அலுவலா் சத்தியநாராயணன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.