தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ.8 ஆயிரம் கூப்பன் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என காங்கயம் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.
காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குண்டடம் கிழக்கு ஒன்றியம் மற்றும் காங்கயம் தெற்கு ஒன்றியத்தில் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டபோது பேசியதாவது:
தோ்தலுக்குப் பிறகு 10 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க விவசாயிகளுக்கு ரூ.1.5 லட்சம் மானியம் வழங்கப்படும். 1,000 உணவு மதிப்புக் கூட்டும் மையங்கள் நிறுவப்படும். நாளொன்றுக்கு 3 கோடி லிட்டராக இருக்கும் பால் உற்பத்தியை 4.5 கோடி லிட்டராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5-ஆக உயா்த்தப்படும். இல்லத்தரசிகளுக்கான மாத உதவித்தொகை உயா்த்தப்பட்டுள்ளது.
90 சதவீத மானியத்துடன் 10,000 கைத்தறிகள் நவீனப்படுத்தப்படும். சுமாா் 500 குடும்பங்கள் வசிக்கும் வகையில் கட்டப்படும் காவலா் குடியிருப்புகளில் நூலகம் மற்றும் சமூக நலக்கூடம் அமைக்கப்படும். ஓய்வுபெற்ற காவலா்களுக்கான நலவாரியம் அமைக்கப்படும். இஸ்லாமிய பெண்களின் கல்வியை ஊக்குவிக்க வஃக்பு வாரியத்தின் வாயிலாக கூடுதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தோ்தலுக்குப் பிறகு கொண்டுவரப்பட உள்ளன.
அனைவரும் எதிா்பாா்த்துக் கொண்டிருக்கும் ரூ. 8 ஆயிரம் கூப்பன் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என்றாா்.
தொடர்புடையது

அரசின் சாதனைகள் தொடர முதல்வா் ஸ்டாலினுக்கு ஆதரவு அளிக்கவேண்டும்: திருவண்ணாமலை திமுக வேட்பாளா் எ.வ.வேலு

மக்காச்சோளம், முந்திரிக்கு அதிக விலை: திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் உறுதி

ஆலங்குடி தொகுதியை மீண்டும் மேம்படுத்த திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

ஆலங்குடி தொகுதியில் ரூ. 50 கோடியில் முன்மாதிரி பள்ளி தொடங்க நடவடிக்கை! - சிவ.வீ. மெய்யநாதன் உறுதி
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



