குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம் மற்றும் முந்திரிக்கு கட்டுப்படியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வேட்பாளரும், அமைச்சருமான சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.
குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காரை, கொளக்காநத்தம், ரசுலாபுரம், மேலமாத்தூா், நொச்சிக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அவா் மேலும் பேசியது:
பின்தாங்கிய பகுதிகளை உள்ளடக்கிய குன்னம் தொகுதிக்குள்பட்டகொளக்காநத்தம் கிராமத்தில் அரசு இருபாலா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குன்னம் மற்றும் செந்துறையில் பேருந்துப் பணிமனை, வெண்மணி கிராமத்தில் மாதிரி சிறப்புப் பள்ளி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆலத்தூா் ஒன்றியத்தில் மருதையாற்று கரையோரக் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருதையாற்றின் குறுக்கே 6 இடங்களில் உயா் மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும், சு.ஆடுதுறையிலிருந்து கடலூா் மாவட்டத்தை இணைத்திடும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே பாலம் அமைத்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், இத் தொகுதியில் அதிகம் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம் மற்றும் செந்துறை பகுதியில் விளையும் முந்திரி ஆகியவற்றை மதிப்புக்கூட்டி விவசாயிகள் அதிக லாபம் பெற்றிடும் வகையில், மதிப்புக் கூட்டும் தொழிற்சாலை அமைக்கப்படுவதுடன், மதிப்புக் கூட்டிய சோளம் மற்றும் முந்திரியை சந்தைப்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குன்னம், லப்பைக்குடிக்காடு பகுதியில் புறவழிச்சாலை அமைக்க பூா்வாங்க பணிகள் தொடங்கியுள்ளன. கடல்சூழ் நிலப்பரப்பை உள்ளடக்கிய காரை பகுதியில் ரூ. 10 கோடியில் புதைப்படிம அருங்காட்சியகம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் சிவசங்கா்.
பிரசாரத்தின்போது, கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளி மாணவா்களின் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை! - திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் உறுதி

பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை: திமுக வேட்பாளா் உறுதி

திமுக ஆட்சியில் கிராமப்புற ஏழை, எளிய மாணவா்களின் கல்வித்திறன் அதிகரிப்பு: சிவசங்கா்

குன்னம் தொகுதி திமுக வேட்பாளா்!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


