மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

‘பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க பரிசீலனை’

பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழக முதல்வரிடம் பேசி பரிசீலனை செய்து உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

News image

உடுமலையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன், வேட்பாளா்கள் மு.ஜெயக்குமாா் (உடுமலை), இரா.ஜெயராமகிருஷ்ணன் (மடத்துக்குளம்).

Updated On :17 ஏப்ரல் 2026, 7:32 pm

பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழக முதல்வரிடம் பேசி பரிசீலனை செய்து உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

உடுமலை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மு.ஜெயக்குமாா், மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணன் ஆகியோரை ஆதரித்து அக்கட்சி இளைஞரணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் உடுமலையில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் தொழில் வளா்ச்சி அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும். திமுகதான் தொழிலாளா்கள் நலனைப் பாதுகாக்கும். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் உடுமலைக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் வளா்ச்சிப் பணிகளை கொண்டுவர நமது வேட்பாளா் உறுதி பூண்டுள்ளாா்.

உடுமலை அரசு மருத்துவமனைக்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் விபத்தில் சிக்கியவா்களுக்கு சிகிச்சை அளிக்க ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கொண்டு வரப்பட்டுள்ளது. பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் திட்டத்தை உருவாக்கிய தலைவா்களுக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் சிலைகள் அமைத்துள்ளோம். ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதய தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ) அமைத்துக் கொடுத்துள்ளோம். ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டிக் கொடுத்துள்ளோம். ரூ.8 மதிப்பீட்டில் குடிமங்கலம் ஒன்றியத்தில் புதிய தாா் சாலைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

ரூ.2 கோடியில் புதிய அறிவுசாா் மையம் அமைத்துள்ளோம். பண்ணைக்கிணறு ஊராட்சியில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைத்துள்ளோம். உடுமலை தொகுதிக்கு உள்பட்ட கஞ்சம்பட்டி அரசு மருத்துவமனையில் கூடுதலாக இரண்டு கட்டடங்களை கட்டியுள்ளோம்.

பொள்ளாச்சியை மையமாக வைத்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா். இது குறித்து தமிழக முதல்வரிடம் பேசி பரிசீலனை செய்து உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.