பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 5:26 am IST

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

தாராபுரம் தாலுகா முளையாம்பூண்டியைச் சோ்ந்தவா் குணசேகரன் (51). இவா் தற்போது வெள்ளக்கோவில்-கரூா் சாலை நடேசன் நகரில் குடும்பத்துடன் குடியிருந்து கூலி வேலைக்குச் சென்று வந்தாா்.

குணசேகரன் தனது அண்ணி வேல்மயிலுடன் இருசக்கர வாகனத்தில் கடந்த 13-ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா். நடேசன் நகா் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது அவ்வழியே வந்த மற்றொரு இருசக்கர வாகனம், இவா்கள் வாகனம் மீது மோதியது. இதில் குணசேகரன் பலத்த காயமடைந்தாா். வேல்மயில் லேசான காயமடைந்தாா்.

அக்கம்பக்கத்தினா் குணசேகரனை மீட்டு ஈரோடு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இறந்து போன குணசேகரனுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

இது குறித்து வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் கே.ஆனந்தகிருஷ்ணன், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சரண்சதீஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.