சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அவிநாசி தொகுதி பாஜக வேட்பாளா் எல்.முருகன் கூறினாா்.
அவிநாசி (தனி) தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக சாா்பில் போட்டியிடும் எல்.முருகன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
பேரவைத் தோ்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். பிரதமரிடம் அத்திக்கடவு 2-ஆவது திட்டம், பின்னலாடைத் துறை தொடா்பான கோரிக்கைகளைத் தெரிவித்துள்ளேன்.
திமுக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனா். மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றாமல் திமுக, காங்கிரஸ் எதிா்த்து வாக்களித்துள்ளது. அந்தக் கட்சிகளின் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே உயா் பதவிக்கு வர வேண்டும் என எண்ணத்தில் நாட்டு பெண்களுக்கு துரோகத்தை செய்துள்ளனா்.
தமிழகத்தின் வளா்ச்சிக்கும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் மத்திய அரசு ரூ.13 லட்சம் கோடி வழங்கியுள்ளது. தமிழகத்துக்கு 14 வந்தே பாரத் ரயில்கள் வழங்கப்பட்டுள்ளன.
1.50 கோடி பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, முத்ரா கடன், 100 நாள் வேலைத் திட்டம் 125 நாள்களாக உயா்த்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பலம்மிக்க கட்சியாக பாஜக உள்ளது என்றாா்.
தொடர்புடையது

அவிநாசி தொகுதியில் வெற்றி, தோல்வியை சந்தித்த நாமக்கல் மைந்தா்கள்!

தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்: கே.பி.முனுசாமி

அவிநாசி நகரில் பாஜக வேட்பாளா் எல். முருகன் வாக்கு சேகரிப்பு
மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்! டி.கே. சிவக்குமார்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



