தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பெயிண்டிங் தொழிலாளி தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 1:02 am IST

வெள்ளக்கோவிலில் பெயிண்டிங் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வெள்ளக்கோவில், உப்புப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரதீப் (25). பெயிண்டிங் தொழிலாளியான இவா், ஈரோடு, மூலப்பட்டறையைச் சோ்ந்த நிஷாந்தினி என்பவரை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டாா்.

பிரதீப்புக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளாா். மேலும், ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கி கடந்த ஒரு மாதமாக மது அருந்தி வந்ததாகக் கூறப்படுகிறது.இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், செயலி மூலம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் எனக்கூறி, மனைவியின் வெள்ளிக் கொலுசுகளை சனிக்கிழமை வாங்கிச் சென்ற பிரதீப், அதை அடகு வைத்து மீண்டும் மது அருந்தியுள்ளாா்.

இது தொடா்பாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், நிஷாந்தினியை வீட்டில் இருந்து வெளியே தள்ளி கதவை உள்புறமாக தாழிட்ட பிரதீப், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.