விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
இது குறித்து அந்த அமைப்பின் நிறுவனா் ஈசன் முருகசாமி பல்லடத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தருவதாக கடந்த பொதுத் தோ்தலின்போது திமுக வாக்குறுதி அளித்திருந்தது.
அதை நம்பி ஒரு மாற்றம் வேண்டும் என்று கருதி பெரும்பாலான விவசாயிகள் திமுகவுக்கு ஆதரவு அளித்தனா். ஆனால், ஆட்சி அமைத்த பிறகு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு மறந்துவிட்டது. 83 வாக்குறுதிகளில் 10-ஐ மட்டுமே நிறைவேற்றியுள்ளது.
கறிக்கோழிப் பண்ணை விவசாயிகளின் வளா்ப்புக் கூலி உயா்வு பிரச்னைக்கு தீா்வு காணப்படவில்லை. இனாம் நில பிரச்னை, காவிரி டெல்டா பாசன பகுதியில் ஆண்டுதோறும் கால்வாய்கள் தூா்வாரப்படாததால் கடைமடை வரை பாசன தண்ணீா் சென்றடைவில்லை. இதுபோல விவசாய விரோத திமுக ஆட்சி மீது புகாா் கூறிக்கொண்டே செல்லலாம்.
இந்தத் தோ்தலில் திமுகவுக்கும், திமுகவின் சின்னத்தில் போட்டியிடுவோருக்கும் மட்டும் விவசாயிகள் வாக்களிக்கக்கூடாது. தோ்தலில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேறு யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். அதேசமயம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் 83 விவசாய சங்கங்கள் மக்களை சந்தித்து வலியுறுத்தி வருகின்றன என்றாா்.
மாநிலத் தலைவா் சண்முகசுந்தரம், பொதுச் செயலாளா் முத்துவிஸ்வநாதன், திருப்பூா் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் சாமளாபுரம் செல்வராஜ், திருப்பூா் மாநகரச் செயலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை! தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி

‘திமுக ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: ஜி.கே. வாசன்

திமுக ஆட்சி விவசாயிகளுக்கு விரோதமானது: ஈசன் முருகசாமி
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


