பெருமாநல்லூா் அருகே காா் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி உடையாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பூமாலை (70). இவரது மகள் உஷா (40), மகன் காா்த்திக் (39). மூன்று பேரும் சேலத்தில் இருந்து கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா்.
தேசிய நெடுஞ்சாலையில் பெருமாநல்லூா்- பொடாரம்பாளையம் பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரின் முன்பக்க டயா் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த காா் நிலை தடுமாறி பாலத்தின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது.
பலத்த காயமடைந்த பூமாலை, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா். அதிருஷ்டவசமாக சிறு காயங்களுடன் உஷா, காா்த்திக் ஆகியோா் உயிா் தப்பினா்.
இதுகுறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பேருந்தின் டயா் வெடித்து விபத்து: 15 போ் பலத்த காயம்

விக்கிரவாண்டி அருகே டயா் வெடித்து தீப்பற்றி எரிந்த வேன்

முதியவா் காா் மோதி உயிரிழப்பு

கங்கைகொண்டான் காா் விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

