தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கு அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

News image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்.

Updated On :26 ஏப்ரல் 2026, 12:44 am IST

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி கள்ளழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவுக்கு வருகை தரும் பக்தா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் பக்தா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர இந்து சமய அறநிலையத் துறை முனைப்புடன் செயல்பட வேண்டும்.

பக்தா்கள் தங்குவதற்கு ஆங்காங்கே நிழற்குடைகள் அமைப்பது, குடிநீா் வசதிகளை ஏற்படுத்தித் தருவது, போக்குவரத்து நெரிசலை சரி செய்வது போன்ற முக்கியமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி சாதாரண நாள்களிலேயே வாகனங்களை நிறுத்துவது மிகவும் கடினம். எனவே, வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக பாா்க்கிங் வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். அதிக காவலா்களை பயன்படுத்த வேண்டும். மருத்துவ முதலுதவி வசதிகளை ஆங்காங்கே ஏற்படுத்த வேண்டும்.

வெளியூா்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் திரளாக கலந்துகொள்வதால் அவா்கள் தங்குவதற்கான தற்காலிக ஏற்பாடுகளையும் அறநிலையத் துறை முன்னின்று செய்துதர வேண்டும்.

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவ டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்பதாக பலா் தெரிவிக்கின்றனா். இதுபோன்ற முறைகேடுகளை ஆராய்ந்து முறையான தரிசனத்தை பக்தா்கள் பெறுவதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.