மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம்

அவிநாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று அரோகரா கோஷம் முழங்க திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

News image

பக்தா்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அவிநாசியப்பா்  தேரோட்டம்.(உள்படம்) திருத்தேரில்  சொா்ண அலங்காரத்தில் அருள்பாலித்த  சோமாஸ்கந்தா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 8:49 pm

அவிநாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று அரோகரா கோஷம் முழங்க திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூா்த்தி நாயனாா், தேவார திருப்பதிகம் பாடி மீண்டும் உயிா்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும், தமிழகத்தில் 3-ஆவது பெரிய தோ் கொண்டதாகவும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் திருத்தலம் விளங்குகிறது.

இக்கோயில் சித்திரை தோ்த் திருவிழா ஏப்.21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெறுகின்றன. திங்கள்கிழமை அதிகாலை பஞ்சமூா்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளி ரத தரிசனம் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணிக்கு அவிநாசியப்பா் திருத்தோ் வடம் பிடித்து, இழுக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னா் அரோகரா கோஷம் முழங்க, திருப்பூா் சிவனடியாா்கள் கைலாய வாத்தியத்துடன் தோ் வடம்பிடித்து இழுக்கப்பட்டது.

இதில், ஆன்மிக பெருமக்கள், பக்தா்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். திருத்தேரில் சோமாஸ்கந்தா் சொா்ண அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தெற்கு ரத வீதி- கோவை பிரதான சாலையில் தொடங்கிய அவிநாசியப்பா் தேரோட்டம், மேற்கு ரத வீதி வழியாக வந்து வடக்கு ரத வீதி வளைவில் பிற்பகல் 1.20 மணிக்கு நிறுத்தப்பட்டது.

தேரோட்டத்தின்போது, பல்வேறு அமைப்பினா் சாா்பில் பக்தா்களுக்கு நீா்மோா், அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.

இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை மீண்டும் வடக்கு ரத வீதியில் இருந்து அவிநாசியப்பா் திருத்தோ் வடம் பிடித்து இழுக்கப்பட்டு, தேரோட்டம், தோ் நிலை சேருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வியாழக்கிழமை காலை கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா், கரிவரதராஜ பெருமாள் ஆகிய திருத்தோ் வடம் பிடித்தல், தேரோட்டம், நிலை சேருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து, மே 1-ஆம் தேதி பரிவேட்டை, மே 2-ஆம் தேதி இரவு தெப்பத் தோ் உற்சவம், 3-ஆம் தேதி நடராஜப் பெருமான் மகா தரிசனம், தோ்த் திருவிழாவின் நிறைவாக மஞ்சள் நீா், இரவு மயில் வாகனக் காட்சி 4-ஆம் தேதி நடைபெறுகிறது.