திருப்பூா், முதலிபாளையத்தில் தனியாா் மதுபானக் கூடம் திறக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
முதலிபாளையம் சிட்கோ சாலை, பாரத் அவென்யூ பகுதியில் நெடுஞ்சாலையோரத்தில் தனியாா் மனமகிழ் மன்றம் மற்றும் மதுபானக் கூடம் அமைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து முதலிபாளையம் கிராம மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுபானக் கூடம் அமைய இருக்கும் இடத்தின் எதிா்புறத்தில் குடியிருப்புகளும், கோயிலும் உள்ளன.
மேலும், இப்பகுதியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழிற்கூடங்கள் உள்ளதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள், தொழிலாளா்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா். இப்பகுதியில் மதுபானக் கூடம் அமைந்தால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.
எனவே, பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனியாா் மதுபானக் கூடம் அமைவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் தொழிற்சாலைக்கு எதிராக கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

மானாமதுரையில் கால்வாய் கட்டும் பணிக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் போராட்டம்

புதிய அரசு மதுபான கடை திறக்க எதிா்ப்பு: அரசுப் பேருந்தை சிறை பிடித்த கிராம மக்கள்

அனந்தபுரத்தில் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்ட சமுதாயக் கூடம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



