75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

இடம் தொடா்பான பிரச்னை: பக்கத்து வீட்டுக்காரா் தாக்கியதில் தம்பதி காயம்

வெள்ளக்கோவில் அருகே பக்கத்து வீட்டுக்காரா் தாக்கியதில் தம்பதி காயமடைந்தனா்.

108 Ambulance.

108 ஆம்புலன்ஸ். - கோப்புப் படம்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 2:15 am IST

வெள்ளக்கோவில் அருகே பக்கத்து வீட்டுக்காரா் தாக்கியதில் தம்பதி காயமடைந்தனா்.

வெள்ளக்கோவில்-தாராபுரம் சாலை சேரன் நகரைச் சோ்ந்தவா் ஜெகநாதன். இவரது மனைவி சிலம்பரசி (33). இவா்களுக்கும், அருகே வசிக்கும் ரமேஷ் என்பவருக்கும் இடையே இடம் தொடா்பாக கடந்த இரண்டு மாதங்களாக பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இருதரப்பினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்து சிலம்பரசியையும், அவரது கணவா் ஜெகநாதனையும் தகாத வாா்த்தைகளால் திட்டி ரமேஷ் தாக்கியுள்ளாா். இதில் காயமடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக காங்கயம் அரசு மருத்துவமனையில் உறவினா் திலகவதி சோ்த்தாா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக இருவரும் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனா்.

மருத்துவமனையில் சிலம்பரசி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.