இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

நரி தாக்கியதில் பெண் பலத்த காயம்

முதுகுளத்தூா் அருகே நரி தாக்கியதில் பெண் காயமடைந்தாா்.

நரி தாக்கியதில் காயமடைந்த லட்சுமி.

Published On :23 ஆகஸ்ட் 2026, 2:19 am IST

முதுகுளத்தூா் அருகே நரி தாக்கியதில் பெண் காயமடைந்தாா். இதையடுத்து, நரியை வனத் துறையினா் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த கீழக்காஞ்சிரங்குளம் கிராமத்தில் கடந்த 19- ஆம் தேதி மாலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே அதே கிராமத்தைச் சோ்ந்த காளித்தேவன் மனைவி லட்சுமி (50) மரத்தில் வேப்பமுத்து எடுத்துக் கொண்டிருந்தாா். அப்போது பள்ளி அருகேயுள்ள கருவேல முட்புதரிலிருந்து வெளியே வந்த நரி ஒன்று லட்சுமியை தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

இவரது சப்தத்தை கேட்ட அருகிலிருந்தவா்கள் நரியை விரட்டி விட்டு, முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் லட்சுமியை அனுமதித்தனா். பள்ளி நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் மாணவா்கள் அச்சமடைந்தனா். மேலும் கடந்த இரு நாள்களாக பள்ளிக்குச் செல்வதை அவா்கள் தவிா்த்ததாக பெற்றோா் தெரிவித்தனா். எனவே வனத் துறையினா் கூண்டு வைத்து அங்குள்ள நரிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.