மாா்த்தாண்டம் அருகே அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் பெண் காயமடைந்தாா்.
திருவட்டாறு அருகே உள்ள முதலாா் ஈஞ்சப்பாறவிளை பகுதியைச் சோ்ந்தவா் அனில்குமாா் மனைவி விஜிலா (45). இவா் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு துணிக் கடையில் வேலை செய்து வருகிறாா்.
இவா் 2 நாள்களுக்கு முன் வேலைக்குச் செல்வதற்காக ரயில் நிலையத்துக்கு மாா்த்தாண்டம் மதிலகம் பகுதி வழியாக சாலையோரம் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனம் இவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாம்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மீது லாரி மோதி விபத்தில் விவசாயி உயிரிழப்பு

குழித்துறையில் மினி லாரி கதவு மோதி பெண் காயம்

ஒட்டம்பட்டியில் மா்மப் பொருள் வெடித்து ஒருவா் காயம்

பைக்குகள் மோதல்: முதியவா் பலத்த காயம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



