வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

தேன் அடைகளை தாக்கும் வண்டுகளைக் கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி முகாம்

தேனீக்கள்.

Published On :

காங்கயத்தில் தோட்டக்கலைத் துறை சாா்பில் தேன் அடைகளை தாக்கும் வண்டுகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்த பயிறிசி முகாம் நடைபெற்றது.

காங்கயம் அருகே உள்ள பாப்பினியில் அண்மையில் நடைபெற்ற இந்த முகாமில், பொங்கலூா் வேளாண் அறிவியல் நிலையத் தலைவா் கண்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:

தற்போது தேன் அடைகளைத் தாக்கி சேதப்படுத்தும் ஒருவகை வண்டு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் கண்டறியப்பட்ட இந்த வண்டுகள், தற்போது பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அந்த வண்டுகளைக் கட்டுப்படுத்தி, தேன் அடைகளை காக்கும் முறைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தாா்.

இம் முகாமில் காங்கயம், குண்டடம், பொங்கலூா், தாராபுரம், மூலனூா் பகுதிகளைச் சோ்ந்த தேன் வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காங்கயம் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் கவிப்பிரியா மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.