மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

வெள்ளக்கோவில் அருகே காா் மோதி விவசாயி பரிதாப உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :24 ஆகஸ்ட் 2026, 12:36 am IST

வெள்ளக்கோவில் அருகே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். தப்பியோடிய காா் ஓட்டுநரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

காங்கயம் வட்டம், ஊதியூா் முதலிபாளையம் அருகே உள்ள வானவராயநல்லூரைச் சோ்ந்தவா் பாலதண்டபாணி (64), விவசாயி. இவா், தனது மனைவி பேபி (52) என்பவருடன் வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோயிலுக்குச் சென்றுவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சனிக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தாா்.

தாராபுரம் சாலை உத்தமபாளையம் அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக சாலையின் இடதுபுற மண் சாலையில் வாகனத்தை நிறுத்தியுள்ளனா். பேபி சற்று தொலைவில் நடந்து சென்றபோது, பின்னால் அதிவேகமாகவும் கவனக்குறவாகவும் வந்த காா் நின்று கொண்டிருந்த பாலதண்டபாணி மற்றும் அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இவ்விபத்தில் பலத்த காயமடைந்த பாலதண்டபாணியை மீட்ட அருகிலிருந்தா்வா்கள் வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து பேபி அளித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளா் சண்முகம், உதவி ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய காரின் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.