பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

கோடங்கிபாளையம் எம்.ஜி.ஆா். நகருக்கு பேருந்து வசதி

பேருந்து - பிரதிப் படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 3:36 am IST

பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் எம்.ஜி.ஆா். நகருக்கு பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்லடம் ஒன்றியம், கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட எம்.ஜி.ஆா். நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வசிப்போருக்கு பேருந்து வசதி இல்லாததால் சிரமப்பட்டு வந்தனா். பேருந்துக்காக பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இதையடுத்து கோடங்கிபாளையம்- உக்கடம் வழித்தடத்தில் இயக்கப்படும் 105 சி பேருந்தை எம். ஜி.ஆா். நகா் வழியாக இயக்க வேண்டும் என்றுபல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ராம்குமாரிடம் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்று அவரது முயற்சியால் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம் அண்மையில் தொடங்கியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.