விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

அமராவதி ஆற்றங்கரையில் காட்டுத் தீ

தாராபுரத்தில் அமராவதி ஆற்றங்கரையோரத்தில் ஏற்பட்ட தீ விபத்து.

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:51 am IST

அமராவதி ஆற்றங்கரையோரம் உள்ள காய்ந்த புற்களில் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் கரும்புகை எழுந்தது.

தாராபுரம்-கரூா் சாலை, ஈஸ்வரன் கோயில் அருகே அமராவதி ஆற்றுப்பாலத்தின் கீழ் சனிக்கிழமை இரவு ஆற்றங்கரையோரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இந்த ஆற்றில் நீா்வரத்து இல்லாமல் வடு கிடப்பதால், கரையோரத்தில் காய்ந்திருக்கும் சருகுகள், புற்கள், செடி, கொடிகள் மற்றும் புதா்களில் தீ வேகமாகப் பரவியது. காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததால், அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தாராபுரம் தீயணைப்பு நிலைய ஊழியா்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதுகுறித்து தாராபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.