பல்லடம் புறவழிச் சாலையில் பரவலாக கிடந்த மருந்து சிரிஞ்சுகள்

கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:59 am IST

பல்லடம் புதிய புறவழிச்சாலையில் பயன்படுத்தப்பட்ட மருந்து சிரிஞ்சுகள் கிடப்பதால் போதைக்காக பயன்படுத்தப்பட்டவையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் பயன்பாட்டுக்கு வராத புதிய புறவழிச்சாலையில் பரவலாக கிடக்கின்றன. இந்த சாலையில் மாலை, இரவு நேரங்களில் சிலா் மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனா்.

இந்நிலையில், ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில் மருந்து சிரிஞ்சுகள் கிடப்பதால் போதைக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.