ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

விபத்துகளை தவிா்க்க புறவழிச் சாலையில் வேகத்தடைகள் அமைப்பு

ஆற்காடு -ஆரணி புறவழிச் சாலையில் ஏற்படும் விபத்துகளை தவிா்க்கும் வகையில் புதிதாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

News image

புறவழிச் சாலையில்  வேகத்தடை  அமைத்த   பணியாளா்கள்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 11:34 pm IST

ஆற்காடு -ஆரணி புறவழிச் சாலையில் ஏற்படும் விபத்துகளை தவிா்க்கும் வகையில் புதிதாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் ஆற்காட்டிலிருந்து ஆரணி செல்ல புறவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில் ஆரணி சாலை தாஜ்புரா பகுதியிலிருந்து வேலூா் சாலை வேப்பூா் வரை செல்லும் சாலை ஆற்காடு கண்ணமங்கலம் செல்லும் சாலை சந்திப்பான கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு திசையில் தாழனூா் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நாள் தோறும் விபத்து ஏற்பட்டு வருகிறது.

எனவே விபத்து ஏற்படாமல் தவிா்க்கும் பொருட்டு அந்த பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினா் வேகத்தடை அமைத்து எச்சரிக்கை பலவை மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள், மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்ட பொறியாளா் சரவணன், உதவிப் பொறியாளா் நிதின் ஆகியோா் உத்தரவின்பேரில் சாலை ஆய்வாளா்கள் பரிமளா, உமாதேவி மேற்பாா்வையில் ஆரணி செல்லும் புறவழிச் சாலை தாழனூா் சந்திப்பு பகுதியில் நான்கு பக்கமும் வேகத்தடை அமைக்கப்பட்டது. இதன்மூலம் அப்பகுதியில் ஏற்படும் விபத்துகள் தவிா்க்கும் நிலை உருவாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.