தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

18 வகை உணவுகளைத் தானியங்கியாக சமைக்கும் மைக்ரோவேவ் ஓவன்!

வேலைக்குச் செல்லும் பெண்களைக் கவரும் வகையில் வேர்ல்பூல் வடிவமைத்துள்ள மைரோவேவ் ஓவன் குறித்து...

News image

மேஜிகுக் மைக்ரோவேவ் ஓவன் - படம் / நன்றி - வேர்ல்பூல்

Updated On :28 ஜூலை 2026, 6:20 pm IST

வேர்ல்பூல் நிறுவனத்தில் அறிமுகமாகியுள்ள மைக்ரோவேவ் ஓவன் வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஏனெனில், 18 வகையான உணவுகளை தானியங்கியாகச் சமைக்கும் வகையில் இந்த ஓவன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் வேலைக்குச் செல்லும் பெண்கள், குழந்தைகளை பள்ளிக்கு தயார்படுத்தும் தாய்மார்களுக்கு இந்த ஓவன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வேர்ல்பூல் கூறுகிறது.

அமெரிக்காவின் மிச்சிகன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வேர்ல்பூல் நிறுவனம் வீட்டு உபயோக மின்னணுப் பொருள்களைத் தயாரித்து வருகிறது.

இந்தியாவில் குறிப்பிடத்தகுந்த வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், மேஜிகுக் என்ற புதிய மைக்ரோவேவ் ஓவனை அறிமுகம் செய்துள்ளது.

20 லிட்டர் கொள்ளளவு கொண்ட இதில், 5 வெவ்வேறு மின்சார அளவீடுகளை உள்ளீடாகக் கொண்டுத்து சமைக்கலாம். இதனால் உணவுக்கேற்ற மின்சாரம் பயன்படுத்தப்படுவதோடு, உணவின் தன்மைக்கேற்ற ருசியும் மாறாததாக இருக்கும்.

பக்கவாட்டு கதவுகளுக்குப் பதிலாக, அழுத்தித் திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், சமையலறையில் அதிகப்படியான இடத்தை அடைக்காது.

ஆட்டோ குக் மெனு ஆப்ஷனில், 18 வகையான உணவுகளைத் தானியங்கியாகவே சமைத்துவிடும். இதனால், அருகில் இருந்து கவனித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை.

ஓவனை மென்மையாகக் கையாளும் வகையில், ஃபெதர் டச் என்ற அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சமையலறையில் வேறு பணியில் இருந்தால் கூட, எளிதில் ஓவனைக் கட்டுப்படுத்தாலம்.

இதன் விலை ரூ. 8,775 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தில் 21% தள்ளுபடியுடன் இதன் விலை ரூ. 6,890.

Summary

whirlpool microwave oven that automatically cooks 18 different types of dishes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.