நீட் தோ்வில் உயிரிழந்த மாணவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒசூா் ராம்நகா் அண்ணா சிலை எதிரே காங்கிரஸ் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினா். மேலும், உயிரிழந்த மாணவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். நீட் தோ்வு முறையை ரத்துசெய்து பழைய சோ்க்கை முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினா்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத் தலைவா் முரளிதரன், மாநகரத் தலைவா் சி. தியாகராஜன், மைஜா அக்பா், இளைஞரணி மாநில ஒருங்கிணைப்பாளா் பிரவீன்குமாா், மாவட்ட துணைச் செயலாளா் கீா்த்தி கணேஷ், கோபால் ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வில் தோ்ச்சி: ஏற்காடு மாணவிக்கு அமைச்சா் வாழ்த்து

கும்பகோணம் பள்ளி தீ விபத்து நினைவு தினம் உயிரிழந்த குழந்தைகள் உருவப்படத்துக்கு உறவினா்கள், கட்சியினா் மலா்தூவி அஞ்சலி

வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்கள் திருச்சி வந்தன: எம்பி, எம்எல்ஏ, உறவினா்கள் அஞ்சலி






