டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

சிறிய குடும்பங்களைக் கவரும் ரியல்மி குளிர்சாதனப் பெட்டி!

ரியல்மி நிறுவனத்தில் அறிமுகமாகியுள்ள குளிர்சாதனப் பெட்டி குறித்து...

News image

ரியல்மி குளிர்சாதனப் பெட்டி - படம் / நன்றி - ரியல்மி

Updated On :27 ஜூலை 2026, 5:49 pm IST

ரியல்மி நிறுவனத்தில் புதிதாக குளிர் சாதனப் பெட்டி (ஃப்ரிட்ஜ்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறிய குடும்பத்தினர், திருமணமாகாதவர்கள் (பேச்சிலர்ஸ்) இலக்காகக் கொண்டு சிறிய அளவில் இவை தயாரிக்கப்படுகின்றன.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரியல்மி நிறுவனம் ஸ்மார்ட்போன்களை தயாரித்து உலகளவில் பிரபலமடைந்தது. தற்போது மின்னணு மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பில் ரியல்மி கவனம் செலுத்தி வருகிறது. ரியல்மி லைஃப் டெக் என்ற பெயரில் இவை தயாரிக்கப்படுகின்றன.

ரியல்மி நிறுவனம் டெக் லைஃப் என்ற தரவரிசையில் தயாரிக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான குளிர் சாதனப் பெட்டி, 85 லிட்டர் கொள்ளவு உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நேரடியாக குளிர்விக்கும் முறையில் 600ஏ ரெப்ரிஜிரென்ட் மூலம் திறம்பட குளிர்விக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பெரிய பாத்திரங்களின் எடையைத் தாங்கும் கண்ணாடி அலமாரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. காய்கறி, பழங்களை நீண்ட நாள்கள் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளும் வகையில் அரோமா லாக் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.

ஆன்டி - பாக்டீரியல் கேஸ்கெட் வழங்கப்பட்டுள்ளதால், சீக்கிரம் பொருள்கள் கெட்டுப்போகாது; பெரிய பாட்டில்கள் வைக்கும் வசதி, முட்டை மற்றும் ஐஸ் கட்டிகள் வைக்கும் அம்சங்கள் உள்ளன. இதன் விலை ரூ. 9,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் சிறிய அளவிலான குளிர்சாதனப் பெட்டிகளைத் தயாரித்திருந்தாலும், தற்போது பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 180 லிட்டர், 233 லிட்டர் கொள்ளளவு உடைய குளர்சாதனப் பெட்டிகளையும் ரியல்மி தயாரித்து வருகிறது.

Summary

Realme Techlife Refrigerators that appeals to small families

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.