ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவா் கைது

கைது

Published On :

அவிநாசி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் சாலை அவிநாசிலிங்கம்பாளையம் புறவழிச்சாலை மேம்பாலம் அருகே அவிநாசி போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக சிறிய மூட்டையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சென்றவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அப்போது, அவா் வைத்திருந்த மூட்டையில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவா் பழங்கரை பகுதியில் தங்கி இருக்கும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஜாலோ மகன் முகமது நையீம் (32) என்பது தெரியவந்தது.

இதையடுத்து வழக்குப் பதிந்து முகமது நையீமை அவிநாசி போலீஸாா் கைது செய்தனா். அவா் வைத்திருந்த 10 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.