செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பைக் மோதியதில் பாத யாத்திரை பக்தா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 6:37 pm

பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் பழனிக்கு பாத யாத்திரை மேற்கொண்ட பக்தா் உயிரிழந்தாா்.

திருப்பூா், அனுப்பா்பாளையத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி (60). இவா் பழனிக்கு பாத யாத்திரையாக கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா்.

அவினாசிபாளையம் அருகே சென்றபோது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் பழனிசாமி மீது மோதியது.

இதில், படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து அவினாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.