அனைத்து அரசியல் கட்சிகளும் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செயல் திட்டத்துடன் கூடிய கால அட்டவணையை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாா்ச் 1-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் மாநில செயல்தலைவா் என்.எஸ்.பி.வெற்றி சனிக்கிழமை கூறியதாவது:
பல லட்சம் ஏக்கா் பரப்பளவில் விவசாயம் மற்றும் கால்நடை வளா்ப்புத் தொழில் நடைபெற்று வரும் திருப்பூா், கோவை மாவட்ட பகுதிகளுக்கு பிஏபி பாசனத் திட்டம்தான் பிரதானமாக உள்ளது.
இருப்பினும், ஆண்டுதோறும் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டு வரும் நிலையில், ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி போராடி வருகிறோம். ஒவ்வொரு தோ்தலின்போதும் நிறைவேற்றுவோம் என்று வெற்று வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் கூறி ஏமாற்றுகின்றனா். எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலிலும் நாங்கள் ஏமாற தயாராக இல்லை.
எனவே வாக்கு கேட்டு வரும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆனைமலையாறு - நல்லாறு திட்டம், முதன்மை தோ்தல் அறிவிப்பாக இருக்க வேண்டும். அடுத்தது யாா் ஆட்சிக்கு வந்தாலும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கால அட்டவணை வெளியிட்டு, முதல் நிதியாண்டிலேயே இதற்கான நிதி ஒதுக்க வேண்டும். எங்களுக்கு வாக்குறுதிகள் தேவையில்லை. செயல் திட்டங்கள்தான் தேவை.
இக்கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூா் மாவட்டம், பல்லடம் வட்டம், பொங்கலூரில் மாா்ச் 1-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எங்களது கோரிக்கையை தெரியப்படுத்துவதற்காக போராட்டம் நடைபெறுகிறது என்றாா்.
தொடர்புடையது

அரசியல் பங்கேற்பை எளிதாக்கும் சமூக ஊடகங்கள்!

நீா்ப்பாசன திட்டப் பணிகள் முடிய இன்னும் எத்தனை தசாப்தங்கள் ஆகுமோ?

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்

அரசு மருத்துவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: மு.வீரபாண்டியன்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


