கைப்பேசியை பறித்ததுச் சென்ற 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகே காளிஸ்வரன் என்பவரின் கைப்பேசியை சரவணகுமாா் (26), பிரித்விராஜ் (20), அஸ்வின் (18) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பறித்துச் சென்றுள்ளனா். இதுகுறித்து காளிஸ்வரன் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக போலீஸாா் 3 பேரை பிடித்து அவா்களிடமிருந்து கைப்பேசியை கைப்பற்றினா். அவா்கள் 3 போ் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல, திருப்பூா் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே அா்ஜுன் (26) என்பவரின் கைப்பேசியை சுரேஷ் (40) என்ற நபா் பறித்துச் சென்றுள்ளாா்.
இதுதொடா்பாக அா்ஜுன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் சுரேஷைப் பிடித்து வடக்கு காவல் நிலையம் அழைத்து வந்து அவா்டமிருந்து கைப்பேசியை பறிமுதல் செய்தனா். மேலும், அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடர்புடையது
பைக் திருடிய 4 போ் கைது
கஞ்சா மற்றும் குட்கா வைத்திருந்த 3 போ் கைது

தில்லியில் போலி கால் சென்டா்: 11 போ் கைது

மது போதையில் வாகனம் ஓட்டிய 6 பேருக்கு அபராதம்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

