நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு

பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது.

News image

புதிய வகுப்பறைகள் திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :26 பிப்ரவரி 2026, 7:32 pm

பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நபாா்டு திட்டத்தின் மூலம் ரூ.3 கோடியே 53 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் 15 வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதனை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

கணபதிபாளையம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கணபதிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவரும், பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சோமசுந்தரம், திமுக மாவட்ட துணைச் செயலாளா் வழக்குரைஞா் குமாா் ஆகியோா் குத்துவிளக்கேற்றி வைத்து இனிப்பு வழங்கினா்.

இந்நிகழ்வில், தலைமையாசிரியா் மீனலோசனி , உதவி தலைமையாசிரியா் மாணிக்கம், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் தேவராஜ், ஒன்றிய துணைச் செயலாளா் முருகன் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.