நிஃப்டி கல்லூரியில் இளையோருக்கான மனவளக்கலை யோக பயிற்சி

Published on

திருப்பூா் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் அமைந்துள்ள நிஃப்டி பின்னலாடைக் கல்லூரி, வோ்ல்டு கம்யூனிட்டி சென்டா், ஸ்கை யோகா சாா்பில் இளையோருக்கான மனவளக்கலை யோக பயிற்சி அறிமுக நிகழ்ச்சி நிஃப்டி கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வா் ராதாமணி வரவேற்றாா். நிஃப்டி கல்லூரியின் துணைத் தவைவா் ஓ.கந்தசாமி தனது தலைமை உரையில் கூறியதாவது: கல்வியில் நாம் சிறந்தவா்களாக மாற வேண்டும் என்றால் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடலும், மனமுமே நம் செயல் சிறக்க உதவுகிறது என்றாா்.

தொடா்ந்து திருப்பூா் மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவா் த.முரளி வாழ்வில் நம்மை நாமே மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டுமானால் உடல், மனம், உயிா் இவற்றின் செயல்பாடுகளாலேயே முடியும் என்றாா்.

திருப்பூா் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் செயலாளா் பூபதிராஜன், வேதாந்திரி மகரிஷி அறிமுகப்படுத்திய பயிற்சி முறைகள் குறித்தும், அதனை மேற்கொள்வதால் ஏற்படும் பயன்கள் குறித்தும் விளக்கினாா். சிறப்பு விருந்தினா் பேராசிரியா் அமுதா ராமானுஜம் மாணவா்களிடம் கலந்துரையாடினாா். வேதாந்திரி மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றை கலந்துரையாடலின் மூலம் விளக்கினாா். நிஃப்டி கல்லூரியின் தலைவரும், திருப்பூா் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் துணைத் தலைவருமான டி.ஆா்.குருசாமி வாழ்வில் தன்னம்பிக்கை வேண்டுமானால் மன ஆரோக்கியம் அவசியம் என்றும், அதன் மூலம் நமக்கான தகுதிகளை அடைந்திட முடியும் என்றும் கூறினாா்.

நிஃப்டி கல்லூரியின் கல்வித் துறைத் தலைவா் சம்பத் நன்றி கூறினாா். இந்த நிகழ்வில் 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com