சாலையில் கவிழ்ந்து கிடக்கும் லாரி.
திருப்பூர்
அவிநாசி அருகே சாலையில் கவிழ்ந்த லாரி
அவிநாசி அருகே விறகு பாரம் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கேரளத்தில் இருந்து விறகு பாரம் ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம், பெருந்துறைக்கு வியாழக்கிழமை அதிகாலை லாரி சென்று கொண்டிருந்தது.
அவிநாசி -தெக்கலூா் நல்லிக்கவுண்டம்பாளையம் பிரிவு புறவழிச் சாலை அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநா் மற்றும் அவருடன் இருந்த உதவியாளா் ஆகியோா் காயமடைந்தனா்.
விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸாா், ஓட்டுநா், உதவியாளரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தொடா்ந்து, கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தினா். இதையடுத்து, அணிவகுத்து நின்ற வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.

