திருப்பூர்
குமரன் குன்று முருகன் கோயில் வளாகத்துக்கு ‘சீல்’
பெருமாநல்லூா் அருகே குமரன் குன்று முருகன் கோயில் இருந்த வளாகத்தை பூட்டி வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
பெருமாநல்லூா் அருகே ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட ராக்கியாபட்டி பகுதியில் 2.8 ஏக்கா் பரப்பளவில் அரசு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த குமரன் குன்று முருகன் கோயில் நீதிமன்ற உத்தரப்படி கடந்த புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதி வளாகத்தை பூட்டி வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா். பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.
