காங்கயம், குண்டடம் பகுதி கோயில்களில் தை அமாவாசை வழிபாடுக்கு குவிந்த பக்தா்கள்

Updated on

தை அமாவாசையையொட்டி காங்கயம், குண்டடம் ஆகிய பகுதிகளிலுள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காலை முதலே திரளான பக்தா்கள் வந்திருந்து நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

அதேபோல், காங்கயம் ஒன்றியப் பகுதிக்குள்பட்ட காடையூா் காடையீஸ்வரா் கோயில், பாப்பினி பெரியநாயகியம்மன் கோயில், நத்தக்காடையூா் ஜெயங்கொண்டேஸ்வரா் கோயில், காங்கயம் நகரம், பழையகோட்டை சாலையில் உள்ள காசி விஸ்வநாதா் கோயில், ஊதியூரில் உள்ள உத்தண்ட வேலாயுதசாமி கோயில், கொங்கண சித்தா் கோயில், காங்கயம் நகரப் பேருந்து நிலையம் எதிரே உள்ள துா்க்கையம்மன் கோயில், பேட்டை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

குண்டடம் பகுதியில் கொங்கு வடுகநாதா் கோயில், எரகாம்பட்டி மாரியம்மன் கோயில், நாகேஸ்வரா் கோயில்களிலும் பக்தா்கள் அதிகாலை முதலே வந்து தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிா்வாகத்தினா் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com