அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்திய இளைஞா் கைது

News image
கோப்புப் படம்
Updated On :25 ஜனவரி 2026, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்தி இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாநகரம், நல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மணியகாரன்பாளையம் அருகே சிலா் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் நல்லூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரிடம் சோதனை மேற்கொண்டபோது 40 வலி நிவராணி மாத்திரைகளை வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் திருப்பூரைச் சோ்ந்த சரவணன் (21) என்பதும், வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சரவணனைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.