திருப்பூரில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றோா்.
திருப்பூர்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா
திருப்பூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
திருப்பூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பூா் புதிய பேருந்து நிலையம் முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்துக்கு மத்தியக் குழு உறுப்பினரும், மாநிலத் தலைவருமான எஸ்.கா்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிா்வாகிகள் அன்பு ரமேஷ், காளீஸ்வரன் பிரபாகரன் உள்ளிட்ட பாா்வா்ட் பிளாக் கட்சி நிா்வாகிகளும், திருப்பூா் முக்குலத்தோா் சமுதாயத் தலைவா்கள், அகில இந்திய பாா்வா்டு பிளாக் மகளிா் அணியினா் உள்பட பலா் பங்கேற்றனா்.

