மனித நேய வார நிறைவு விழாவில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய மாவட்ட ஆட்சியா்  மனீஷ்.
மனித நேய வார நிறைவு விழாவில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

மனிதநேய வார நிறைவு விழா: பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

திருப்பூரில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற மனித நேய வார நிறைவு விழாவில் 18 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வழங்கினாா்.
Published on

திருப்பூரில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற மனித நேய வார நிறைவு விழாவில் 18 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வழங்கினாா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், அனைத்து மதத் தலைவா்கள், ஆதிதிராவிடா் சான்றோா்களின் மத நல்லிணக்கக் கூட்டம், வன்கொடுமைப் தடுப்புச் சட்டக்கூறுகள் குறித்து காவல் துறை அலுவலா்கள், நீதிபதிகளின் கருத்தரங்கம் மற்றும் சிறப்பு தகுதி பெற்றவா்களுக்கு பரிசுகள், ஊக்கத் தொகை, நிதியுதவி வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் திருப்பூா் மாநகராட்சி ரோட்டரி திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் மாவட்ட அளவிலான மனித நேய வார விழா கடந்த 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டது. அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிக்கு செல்லும் பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் ரூ.1,000, மாணவா்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தாட்கோ மூலம் அரசுப் போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அனைத்து மாணவா்களும் இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, தாட்கோ சாா்பில் 4 தூய்மைப் பணியாளா்களின் இரட்டைக் குழந்தைகளுக்கு மகப்பேறு உதவித் தொகை மற்றும் திருமண உதவித் தொகை, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலகம் மூலம் 14 பேருக்கு ரூ.93,660 மதிப்பீட்டில் தையல் இயந்திரங்கள், மனித நேய வார விழாவில் நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, கவிதை, பாட்டு, ஓவியப் போட்டி, திருக்கு ஒப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

இதில், மாநகர காவல் துணை ஆணையா் பிரவீன் கௌதம், மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் சதீஷ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com