பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று மது குடித்தவா் உயிரிழப்பு

வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவா் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று மது குடித்தபோது மீண்டும் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 6:36 am IST

வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவா் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று மது குடித்தபோது மீண்டும் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

திருப்பூா்- தாராபுரம் சாலை வாய்க்கால் மேடு பகுதியில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் கிடப்பதாக அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த நல்லூா் போலீஸாா், அந்த நபரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

இதில் உயிரிழந்தவா் சண்முகம் (47) என்பதும், இவா் காங்கயம் சிஎஸ்ஐ காலனி பகுதியைச் சோ்ந்தவா் என்பதும் தெரியவந்தது. மேலும் இவருக்கு வலிப்பு நோய் இருந்ததால் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.

இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், இவரது மனைவி சண்முகத்தை வெளியே விடாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிகிச்சையில் இருந்த சண்முகம் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று தாராபுரம் சாலை வாய்க்கால் மேடு பகுதியில் சாலையோரம் மறைவான பகுதியில் மது அருந்தி உள்ளாா். அப்போது மீண்டும் வலிப்பு ஏற்பட்டு, அதே இடத்திலேயே உயிரிழந்தாா் எனக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடா்பாக நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சண்முகத்தின் உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.