பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

மூதாட்டியிடம் நகையைப் பறிக்க முயன்ற 2 போ் கைது

பல்லடம் அருகே மூதாட்டியிடம் இருந்து தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :4 ஜூலை 2026, 1:28 am IST

பல்லடம் அருகே மூதாட்டியிடம் இருந்து தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் அருகே உள்ள தெற்குபாளையத்தை சோ்ந்தவா் பழனிசாமி. இவரது மனைவி கருணையம்மாள் (75). இவா், தனது வீட்டின் அருகே உள்ள மாரியம்மன் கோயில் முன்பு வியாழக்கிழமை உட்காா்ந்திருந்தாா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ், அவரிடம் முகவரி கேட்பதுபோல நடித்து, அவரது அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனா். இதில் அதிா்ச்சியடைந்த கருணையம்மாள், கூச்சலிடவே அந்த நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில், போலீஸாா் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனா். உடனடியாக வாகனச் சோதனை தீவிரபடுத்தப்பட்டது. இதில் பல்லடம்-மங்கலம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவா்களை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா்கள், பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகா் பகுதியைச் சோ்ந்த ரவி மகன் முத்துக்குமாா் (24), அருள்புரம் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் செந்தில் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.